பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த பெட்டி கடைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே பாஞ்சாலங்குளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பெட்டிக் கடைக்காரர் இந்த சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் தின்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என்றும், பொருள்களை தரமாட்டார்கள் என உங்கள் வீட்டில் பொய் சொல்லுங்கள் என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். மேலும் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருவாய் துறையினர் பெட்டி கடைக்கு சீல் வைத்தனர்.