Categories
தேசிய செய்திகள்

திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சியில் ஊழல்… அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்…? வார்டு உறுப்பினர்கள் போர்க்கொடி…!!!!!!

திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டது பற்றி ஆவணங்கள் சமர்ப்பித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்னும் கேள்வி எழும்பியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திப்பிரெட்டி ஹள்ளி ஊராட்சியில் 12 வார்டுகள் இருக்கிறது. இந்த ஊராட்சியின் தலைவராக சித்ரா சுப்பிரமணி என்பவர் பதவி வகித்து வருகின்றார். பாமகவை சேர்ந்த இவர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சக கட்சியை சேர்ந்த துணைத்தலைவி அஸ்வினி திருமால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றார்கள். அதாவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊராட்சி நிர்வாகம் வழங்கிய முக கவசம், ப்ளீச்சிங் பவுடர், கிருமி நாசினி, கையுறைகள் என பல்வேறு விவகாரங்களில் போலி பில்கள் தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார்கள் கொடுத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடுகள் பற்றி ஆரம்ப முதல் தட்டி கேட்டு வருவதாக கூறும் துணைத் தலைவர் அஸ்வினி திருமால் இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருகின்றது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முறைகேடு புகார்கள் பற்றி திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி மன்ற செயலாளர் கந்தசாமி என்பவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது இந்த ஊராட்சியில் பிரச்சனை இருப்பது உண்மைதான். தலைவர் துணைத் தலைவர் இடையே போட்டி மனப்பான்மை இருக்கின்றது. அதனால் பணிகள் முறையாக நடைபெறவில்லை துணைத்தலைவரின் DSC பயன்படுத்தி அவருக்கு அருகே தெரியாமல் ராம்தாஸ் நகர் பகுதியில் போடப்பட்ட போர்வெலுக்கான தொகை 30 .5.2022 அன்று மூன்று லட்சத்து 63 ஆயிரத்து 57 எடுக்கப்பட்டது உண்மைதான். அது ஊராட்சி மன்ற தலைவர் செய்த தவறு. மேலும் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை முறைகேட்டிற்க்கும் எனக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வார்டு உறுப்பினர்கள் கடந்த ஐந்தாம் தேதி ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட்டம் மேற்கொண்டுள்ளனர். ஆதாரங்கள் இருந்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதிர்ச்சியாக இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு வழியாக தர்மபுரி மாவட்ட உதவி இயக்குனர் ஆ மாலா தலைமையில் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஸ்வினி திருமால் மேகலா தனபால் உள்ளிட்ட எட்டு வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விசாரணையின் போது அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தவே முயற்சி செய்ததாக தெரிகின்றது புகார் பற்றி விசாரிக்காமல் சமரசம் பேசுவதாக வார உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். ஒரு ஊராட்சியில் நடைபெற்ற ஊழல் பற்றி ஒரு வருடத்திற்கும் மேலாக துணைத் தலைவர் ஏழு வார்டு உறுப்பினர்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஒருவேளை அதிகாரிகள் யாரேனும் இதன் பின்னணியில் இருந்தால் அவர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் கடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Categories

Tech |