திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணம் பற்றி ரயில்வே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
1980 ஆம் வருடம் பெங்களூர் – மைசூர் இடையே அதிவேக விரைவு திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 139 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் இந்த ரயிலானது சென்றடைகிறது. இந்த சூழலில் இந்த ரயில் பெயரை உடையார் எக்ஸ்ப்ரஸ் என இந்திய ரயில்வே பெயர் மாற்றம் செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இஸ்லாமிய மன்னர் திப்புவின் பங்களிப்பை மழுங்கடிக்கும் முயற்சி என பலரும் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய ரயில்வே துறை இதற்கு விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது மைசூரை ஆண்ட உடையாரும் மன்னர் ரயில்வே துறை கட்டமைப்பிற்கு வழங்கிய உதவி கௌரவிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதில் அரசியல் இல்லை என கூறியுள்ளார்.