திமிங்கல வாந்தி பற்றி இந்த செய்தி குறிப்பில் சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.
கடலில் வாழும் அம்பர்கிரிஸ் திமிங்கலம் தன்னுடைய செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் திடமான கழிவுப் பொருள் திமிங்கல வாந்தி என அழைக்கப்படுகிறது. இந்த திமிங்கல வாந்தி கருப்பு, சாம்பல், பழுப்பு மற்றும் வெள்ளை போன்ற பல விதமான நிறங்களில் காணப்படுகிறது. இந்த திமிங்கல வாந்தி அரபு நாடுகளில் அதிக விலைக்கு விற்பனையாகிறது. இந்த திமிங்கல வாந்தியின் ஒரு கிலோ 1 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும். இது தங்கத்தின் விலையை விட அதிகளவில் விற்பனையாவதால் கடல் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் அம்பர்கிரிஸ் திமிங்கலம் பீலி கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உட்கொள்கிறது. இந்த பீலி கணவாய்களின் மேல்புறத்தில் இருக்கும் ஓட்டை திமிங்கலத்தால் செரிக்க வைக்க முடியாது.
இதனால் பீலி கணவாயின் ஓடுகள் திமிங்கலத்தின் குடலில் சிக்கிக் கொள்ளும். இந்த ஓடுகளினால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக திமிங்கலத்தின் உடலில் பீலி கணவாயின் ஓட்டை சுற்றி ஒரு வகையான திரவம் சுரக்கும். இந்தத் திரவமானது அம்பர்கிரிஸ் என அழைக்கப்படுகிறது. இது நறுமண பொருள்கள் மற்றும் பாலியல் மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த திமிங்கல வாந்தி முதலில் துர்நாற்றம் வீசும். ஆனால் திமிங்கல வாந்தி நன்கு உலர்ந்த பிறகு நறுமணமாக மாறும். இந்த திமிங்கல வாந்தியை விற்பனை செய்யும் நபர்கள் குஜராத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற நாய்களை உடன் வைத்திருப்பர். இந்த திமிங்கல வாந்தியானது சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்த திமிங்கல வாந்தி அரபு நாடுகளில் உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர்கிரிஸ் உலக அளவில் ஒரு வாசனை திரவியமாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர்கிரிஸ் பற்றி மார்க்கோ போலோ தன்னுடைய பயணக் குறிப்புகளில் எழுதியுள்ளார். இது தவிர திமிங்கல வாந்தியானது யுனானி மருத்துவத்தில் மூளை, நரம்பியல் பிரச்சனை, பாலுறவு பிரச்சனை, விந்தணுக்களின் எண்ணிக்கையை பெருக்குதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த அம்பர்கிரிசானது வெப்பமண்டல தீவுகள், பஹாமாஸ், அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் அடிக்கடி கரையொதுங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.