நீட் தீர்மானம் மீது குடியரசு தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என கூறிய திருமாவளவன் அடுத்தகட்டமாக போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், மாநில அரசுகளுக்கு தரக்கூடிய ஜி.எஸ்.டி பாக்கியை கூட இன்னும் தரவில்லை மத்திய அரசு அது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கியிருக்கிறது. எனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பான இந்த விவகாரத்திலும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகளுக்கு உடன்பாடு இல்லை.
திமுக நிலைப்பாடு குறித்து நீங்கள் திமுகவிடம் கேட்டுக் கொள்ளலாம். மொத்தத்தில் ஜிஎஸ்டியை கைவிட வேண்டும். மாநில அரசு ஏற்கனவே இருக்கும் வழிமுறைகளை பயன்படுத்தினாலே போதுமானது. இந்த புதிய வழிமுறை என்பது மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வணிகர்கள், சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி இருக்கின்ற சூழலில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
குடியரசு தலைவர் தான் இதில் முடிவு செய்யவேண்டும். விரைந்து குடியரசு தலைவர் கையொப்பமிட்டு இதைச் சட்டமாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கலந்தாய்வு செய்வோம். இந்த நீட் விலக்கு மசோதாவை சட்டமாக்குவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நாங்கள் ஜனநாயக பூர்வமாக கலந்தாய்வு செய்து தேவைப்பட்டால் வெகுமக்களை திரட்டி போராட்டங்களை நடத்த முயற்சிப்போம் என திருமாவளவன் கூறினார்.