கோவையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து பணியை செய்யும் படி தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் எங்களை வளர்த்து இருக்கிறார். அந்த அடிப்படையில் இந்த கோவை மாவட்டத்தினுடைய வளர்ச்சிப்பணிகளை பார்ப்பதற்காக… கவனித்து அவ்வப்போது அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்காக நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை இந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நான் நியமித்திருக்கிறேன்.
எந்தெந்த மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதிகள் இல்லையோ, அந்த மாவட்டங்களுக்கு இதுபோல அமைச்சர்களை பொறுப்பேற்று பணியாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டு அதை நிறைவேற்றிருக்கிறோம். அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள்தான் என்ற உணர்வோடு நான் இதை செய்து இருக்கிறேன்.
அப்படி நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசி, அரசு அதிகாரிகளோடு ஆய்வு நடத்தி, அந்த அடிப்படையில் இலட்சக்கணக்கான மக்களை சந்தித்து, அவர்களது கோரிக்கை மனுக்களைப் பெற்று,
அதனை நிறைவேற்றித் தருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடைய அரசை பொறுத்தவரை ஒரு மனுவை கொடுத்தா, அந்த மனு மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும். முடிந்த காரியங்களில் முடிந்தது என்று சொல்லுவோம் என தெரிவித்தார்.