திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சி.டி.வி ரவி கடந்த 20 வருடங்களில் பிரதமர் மோடி மீது ஒரு லஞ்ச புகார் கூட இல்லை. அப்படி சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வருகிறார். எத்தனையோ நல்ல திட்டங்களை மோடி அரசு தமிழகத்திற்கு ஒதுக்கி இருக்கிறது .ஆனால் எப்போதுமே மத்திய அரசுக்கு எதிரான மனநிலையிலேயே சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
திமுக அரசு ஒரே எதிர் மனநிலையில் இருக்கின்றது. நீட் தேர்வை பொருத்தவரை 2020இல் கிராமப்புற மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். எழுநூறு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஆபத்து என்று கூறியுள்ளார்.