Categories
அரசியல்

“திமுகவின் இமேஜை கெடுத்து விடாதீர்கள்…!!” அட்வைஸ் செய்த அமைச்சர்….!!

கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “கட்சி நிர்வாகிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும். பாடுபட்டு உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு.

வெற்றி பெற்றவர்கள் பதவி கிடைத்து விட்டது என்று திமிரு காட்டக்கூடாது. திமுகவின் இமேஜை கெடுத்து விடும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. மக்கள் திமுகவின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் காப்பாற்ற வேண்டும். பொறுமையே பெருமை என்பதற்கு உதாரணமாக திமுக கவுன்சிலர்கள் நடந்துகொள்ள வேண்டும். நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன் எல்லோருக்கும் உங்களுக்கான பதவி மற்றும் பொறுப்பு தானாக வந்து சேரும்.” என அவர் கூறினார்.

Categories

Tech |