திமுக எம்எல்ஏவான சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவுமான சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் இருவரும் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவரின் இளைய மகன் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அன்பழகன், உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு திமுக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.