Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் கூற்று உண்மை… அதிமுகவுக்கு தொடர்பு உண்டு… கனிமொழி அதிரடி…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று திமுக கூறியது உண்மையாகி விட்டது என கனிமொழி கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது.

இந்நிலையில் அந்த வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பைக் பாபு, கெரோன் பவுல் ஆகிய மூன்று பேரிடம் சிபிஐ போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டுமென மகளிர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை திமுக தொடர்ந்து சொல்லி வந்தது என எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் “திமுகவின் கூற்று உண்மை என்பதை, அதிமுக மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளர் உள்ளிட்ட மூன்று அதிமுகவினரை சிபிஐ கைது செய்துள்ளது உறுதிப்படுத்தியுள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து இருந்தால் இந்தக் கைதுகள் நடந்திருக்குமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |