தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அதன்படி முன்னிலை விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும், திருவள்ளூர் தொகுதியில் உள்ள 10 தொகுதியும் திமுக கோட்டையாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் 5, திருவாரூரில் உள்ள நான்கு தொகுதிகளில் 3, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் 3, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது.