தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக தோல்வியடைந்தது. அதேபோல் பாஜகவும் பின்னடைவை சந்தித்தது. இதனையடுத்து திமுகவின் வெற்றி குறித்து அதிமுகவினரும், பாஜகவினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தவகையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற தற்காலிக வெற்றி ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில தேர்தல் ஆணையமும், தமிழக காவல்துறையும் கைகோர்த்து திமுகவின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் வெளிப்படையான தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.