திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத கள்ள நோட்டு, மக்களை ஏமாற்றும் செயல், என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உடுமலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தாராபுரம் தனித்தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகன், பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து மத்திய பேருந்து நிலைய பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக வை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் அனைத்து சந்ததிகள் பயன்பெறும் வகையில் தொலைநோக்குத் திட்டங்களை தற்போது அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு கான்கிரட் வீடுகள் 2023க்குள் கட்டித் தரப்படும் பெண்கள் நாட்டின் கண்கள் அம்மாவின் அரசு ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம், பேறுகால நிதி விலையில்லா மிக்ஸி, இரு சக்கர வாகனம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளது.
குறிப்பாக ஆணுக்குப் பெண் சமம் என்று அனைவரையும் ஒரு சேர அழகு பார்த்தவர், திமுக ஆட்சிக்காலத்தில் 2006ஆம் ஆண்டு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது. ஆனால் அதிமுக அரசில் பல்வேறு தொழிற்முதலிடுகளை உருவாக்கி 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி வரும் அதிமுக அரசு கடந்த 6 வருடமாக மத்திய அரசின் சிறந்த விருது பெற்றுள்ளது. 2006-ஆம் ஆண்டு திமுக அரசில் மின்வெட்டால் ஏழை எளிய மக்கள் கடுமையான சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற உடன் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது.
தற்போது திமுக தேர்தல் அறிக்கை செல்லாத கள்ள நோட்டு. மக்களை ஏமாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு இறுதியில் இலவச நிலம் வழங்கப்படும் என்று உறுதி அளித்து மக்களை ஏமாற்றி உள்ளது உதாரணத்தை கூறலாம் மேலும் அதிமுக அரசு தற்போது பொதுமக்களின் தேவைகளை அறிந்து தேர்தல் அறிக்கையில் உதவித்தொகை ஆயிரத்திலிருந்து 2000ஆக உயர்வு, தாலிக்கு தங்கம் திருமண உதவி தொகை 35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் வாழ்வதாரத்தை காக்கும் வகையில் வங்கி கணக்கில் 1500 வரவு வைக்கப்படும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக தேர்தல் வெற்றி பெற்ற அனைவருக்கும் உறுதியாக வாஷிங் மெஷின் மற்றும் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும். மொத்ததில் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் ஒரே அரசு அதிமுக அரசு என்றும், திமுக-காங்கிரஸ் மத்தியில் ஆளும் போது தமிழகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முன்வரவில்லை. ஆனால் தற்போது உள்ள மத்திய அரசு தமிழகத்தில் ஒரே அரசாணையில் 11 அரசு மருத்துவ கல்லூரி ஒதுக்கியுள்ளது மேலும் ஆறு மாதத்தில் மதுரையில் உள்ள எய்ம்ஸ் கல்லூரி எய்ம்ஸ் மருத்துவமனை ஆறு மாதத்தில் திறக்கபடும் என்று பேசினார்.