தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.ர் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதிப் பங்கீடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. அந்தவகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று திமுக தேர்தல் அறிக்கை யை முக ஸ்டாலின் வெளியிட்டார். அதற்கு முன்னதாக கலைஞர் நினைவிடத்தில் திமுக தேர்தல் அறிக்கை வைத்து வணங்கிவிட்டு பின்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .
அப்போது பேசுகையில், திமுகவின் தேர்தல் அறிக்கைதான் தேர்தல் அறிக்கையை நாயகன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் தேர்தல் அறிக்கைதான் தேர்தலில் கதாநாயகனாக இருக்கும். தலைவர் மு.க ஸ்டாலின் கொடுத்திருக்கும் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகள் தனித்தனி கதாநாயகனாக வெளிப்பட்டுள்ளன. இது வெறும் தேர்தல் அறிக்கை இல்லை. தமிழகத்தை திருத்தி எழுதுவதற்கான தீர்வு பெட்டகம் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.