திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ -வும் திமுக அணி செயலாளராக மாநிலங்களவை எம்.பி. அப்துல்லாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுபற்றி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், மேலும் திமுக அணி செயலாளராக மாநிலங்களவை எம்பி அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.