Categories
அரசியல்

திமுகவின் நோக்கம் இதுதான்…. ஷாக் கொடுக்கும் இந்து முன்னணி தலைவர்…!!!!!!!

இந்துக்கள் பண்பாட்டை அளிக்கும் நோக்கத்தில் திமுக அரசு செயல்பட்டு மடாதிபதிகளை மிரட்டுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார்.

இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தாண்டு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை  திமுக அரசு இடித்திருப்பதாகவும், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களுடைய ஆட்சி நடப்பது போல் மனப்பான்மையில் செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடக்கக்கூடிய பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை இந்துக்கள் பண்பாட்டை அழிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு தடை செய்து இருப்பதாக கூறிய அவர் சில அரசியல் கட்சிகள் மற்றும் நாத்திகவாதிகள் தமிழக முதல்வரை இயக்குவதாகவும், இந்துக்களுடைய கட்டுப்பாடுகளை கலைக்க முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக அரசு மடாதிபதிகளை மிரட்டுவதாகவும் இதனால் பலர்  அச்ச உணர்வோடு இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  இந்துக்களின் கலாச்சாரத்தை உடைக்க வெளிநாடுகளிலிருந்தும் சதி நடைபெறுவதாகவும் மதசார்பற்ற நாடு என்பது  பெயரளவில் மட்டும் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் அரசாங்கத்திற்கு கூட்டணியில் பல கட்சிகள் இந்து விரோத கட்சிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |