திமுக ஐடி விங் செயலாளராக பதவி வகித்து வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அந்த பதவிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த பதவி நியமனத்திற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது டிஆர்பாலு 3 முறை எம்எல்ஏவாக தேர்வான தனது மகனுக்கு அமைச்சரவையில் கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். ஆனால் அமைச்சரவையில் யாரேனும் ஒருவருடைய பதவியை பறித்து டிஆர்பி ராஜாவுக்கு வழங்கினால் கடும் சிக்கல் ஏற்படும். எனவே கட்சி பதவியை டிஆர்பி ராஜாவுக்கு வழங்க முடிவெடுத்து பிடிஆர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் பிடிஆர்-ம் ஜென்டில்மேன் என்பதால் பதவியை இந்தாங்க என்று தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டார். அதோடு மட்டுமில்லாமல் திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி தான் என்பதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் முன்னிலை படுத்த டிஆர்பி ராஜா தான் சரியானவர். ஆனால் பிடிஆரை வைத்து இது போன்ற செயல்களை செய்ய முடியாது. எனவே பிடிஆரை பதவி விலக சொல்லி இருக்கலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.