ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை எப்போது நிறைவேற்றும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதில் புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 55 காசும், டீசல் விலை 19 ரூபாய் குறையும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். மேலும் இதர பாரத ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்கள் குஜராத், கர்நாடகா, கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் 7 ரூபாயும், உத்தரப்பிரதேச மாநிலங்களில் 12 ரூபாயும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கூட திமுக அரசு தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பதாக வாக்குறுதி தெரிவித்திருந்தது. அந்த வாக்குறுதியை திமுக அரசு எப்போது நிறைவேற்றும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூபாய் 10, டீசலுக்கு ரூ.5-ம் குறைத்ததற்கு நன்றி தெரிவித்த தெரிவித்த அவர் திமுக அரசு எப்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் என்பதை கூற வேண்டும் என்று கேட்டுள்ளார்.