Categories
அரசியல்

திமுகவின் வாயா இருந்து பேசுறத நிறுத்துங்க…. அப்புறம் அவ்ளோ தான்…. புகழேந்திக்கு எச்சரிக்கை…!!!

அதிமுகவின் படுதோல்வி குறித்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 80% வெற்றி பெறும் என்று நான் முன்பே கூறினேன். அது தற்போது நடந்து விட்டது. அதிமுகவின் தோல்வியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மாபெரும் இயக்கமாக இருந்த அதிமுக தற்போது தோல்வியையே சந்தித்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மீதான அதிருப்தி தான் அதிமுக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் என்றாலும் கூட அதிமுக சார்பாக வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லி நாம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் திமுகவினர் கொல்லைப்புறமாக வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை. அதிமுக நன்மை அடைய வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று பேசியுள்ளார்.

இதற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்ற திமுக தலைவர் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கிறதா? என்ற விதத்தில் பேசியிருக்கிறார். 2014ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் நிலைமை நிச்சயம் ஏற்படும்.

அதனை இபிஎஸ்- ஓபிஎஸ் மற்றும் அதிமுக தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள் . கர்நாடக மாநிலத்தில் அதிமுக செயலாளராக இருந்த புகழேந்தி அங்கு திமுகவை வீணாக்கி விட்டு பல தவறுகள் செய்து துரோகம் செய்துவிட்டு தற்போது தமிழகத்தில் தலைமறைவாக ஜெயலலிதா பெயரைச் சொல்லிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். எடப்பாடியை கைது செய்ய வேண்டும் எனச் சொல்லும் புகழேந்தி திமுகவின் வாயாக இருந்துகொண்டு பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அவருக்கு சரியான பாடத்தைப் புகட்டுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |