கடவுள் இல்லை என்கின்ற நம்பிக்கையை திமுக நம்மை நம் மீது திணிக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தன்னிச்சையாக முடிவெடுப்போம் என்று சொன்னார்கள். கோவிலை முடியதற்கு இப்போது இவர்கள் காரணம் காட்டுவது மத்திய அரசினுடைய சுற்றறிக்கையை வைத்து காரணம் காட்டுகிறீரர்கள். அதுவும் பொய் என்று நமக்கு தெரியும்.
ஏனென்றால் தேவைப்படும் பொழுது மத்திய அரசு சுற்றிக்கையை ஏற்றுக்கொள்வதும், தேவை இவர்களுக்கு படாத போது மத்திய அரசை மோசமாக பேசுவதும் திமுகவிற்கு கைவந்த கலை. அப்படி இருக்கும்போது கோவிலை முடியதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் ? ஒரே ஒரு காரணம், அவர்களுடைய சித்தாந்தம் என்ன ? கடவுள் இல்லை,
கோவில்கள் இல்லை, கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, கடவுளை கும்பிடுகிறவன் முட்டாள் என்பது தான் அவர்கள் சித்தாந்தம். அதை மக்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் புகுத்த முயற்சிக்கின்றார்கள். விநாயகர் சதுர்த்தியின் போது நாம் கும்பிடுகின்ற விநாயகருக்கு மட்டுமல்ல, சதுர்த்திக்கும் தடை ஏற்படுத்தினார்கள், பூஜையறை வரைக்கும் எட்டிப் பார்த்தார்கள்.
இன்றைக்கு வெள்ளி சனி ஞாயிறு ஆலயத்தை மூடுறேன் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய கடவுள் இல்லை என்கின்ற நம்பிக்கையை நம்மை நம் மீது திணிக்கிறார்கள். இந்த போராட்டத்தில் இஸ்லாமிய சகோதரிகள், கிறிஸ்தவ நண்பர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள். எல்லோருடைய குரலும் கூட எல்லா ஆலயங்களையும் திறந்துவிடு அரசே… இந்து கோவில்களை திறந்துவிடு, இஸ்லாமிய வழிபடுகின்ற மசூதியை திறந்துவிடு, கிறிஸ்தவ நண்பர்கள் செல்கின்ற தேவாலயங்களை திறந்து விடு என்பது தான் எல்லாருடைய குரலாக இருக்கிறது.
அதனால் அரசு மக்களுடைய பொறுமையை சோதிக்க வேண்டாம், மக்களுடைய இறைநம்பிக்கையை சோதிக்க வேண்டாம், மக்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று முதல்-அமைச்சர் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைச்சர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.