Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவிற்கு கொடுத்து பழக்கம் இல்லை… எடுத்து தான் பழக்கம்… முதல்வர் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து பழக்கம் இல்லை எடுத்த தான் பழக்கம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு எந்த நிதி உதவியும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு கொடுத்து பழக்கம் இல்லை. எடுத்து தான் பழக்கம். இந்திய அளவில் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது தமிழகம் மட்டுமே. நான் விவசாயி ஆக இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளதாகவும் அதனால் பயிர்கள் செழித்து வளர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்

Categories

Tech |