திமுக சார்பில் திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக, இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்று பொய் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகிறார்கள். அதிமுகவை குறை கூற போவதில்லை ஏனென்றால் பெரும்பாலான அதிமுகவினர் திமுகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் எடப்பாடி பழனிச்சாமியும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் பதவி கொடுத்தவர்களை காட்டி கொடுத்த அவரை திமுக சேர்த்துக் கொள்ளாது. அதிமுக எப்போது இருந்தாலும் திமுகவிற்கு பங்காளிதான். ஆனால் பாஜக திமுகவிற்கு மட்டும் அல்ல நம்முடைய இனத்திற்கே பகையாளி என்று கூறியுள்ளார்.