ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் 500 பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆன நிலையில், நேற்று தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ராமநாதபுரம், தேனி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் 500 பேர் திமுகவில் இணைந்தனர். புதிய கட்சியை ஆரம்பித்து, ரஜினி மன்ற நிர்வாகிகளை அப்படியே பாஜகவில் இணைக்க அர்ஜுன மூர்த்தி திட்டமிட்ட நிலையில் தற்போது அனைவரும் திமுகவில் இணைந்துள்ளனர்.