Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இணையும் நாம் தமிழர் ராஜீவ் காந்தி …!!

கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து ராஜீவ்காந்தி, பேராசிரியர் கல்யாணசுந்தரம் இருவரும் விலகினர்.

பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது இணைந்த நிலையில் ராஜீவ் காந்தி எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் ஈடுபடாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ராஜீவ்காந்தி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சற்று நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைகிறார் என்ற செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

Categories

Tech |