நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவினால் தற்போது நிலை வரும் பிரச்சினைகள் காரணமாக ஒரு சில அதிமுக தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி காரணமாக ஒருசில அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜகவை சேர்ந்த குஷ்புவும் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செய்தியாளரை சந்தித்து பேசிய குஷ்பு, திமுகவில் சேர போகிறேன் என மனசாட்சியை அடகு வைத்து விட்டு சிலர் பொய் பரப்புகின்றனர். கட்சியிலும், ஆட்சியிலும் பதவி எதையும் கேட்கவில்லை. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைவதற்கு முன்பும் இதே போல்தான் குஷ்பு மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.