Categories
அரசியல்

திமுகவில் முதல்வராக…. உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பாங்களா…? காயத்ரி ரகுராம் கேள்வி…!!!

மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திமுக எம்பியும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தன்னுடைய இல்லத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் பெண்களுக்கும் 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.

அதே போன்று உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது திமுகவின் லட்சியமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதனை விமர்சித்து பேசிய காயத்ரி ரகுராம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “திமுகவில் முதல்வராக இருக்க உங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Categories

Tech |