Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவில் மும்முனை போட்டி” உதயநிதி கொடுத்த புது லிஸ்ட்…. முதல்வர் தேர்வு செய்யும் 15 பேர் யார்…?

திமுக கட்சியில் அடுத்த மாவட்ட செயலாளர்கள் யார் என்பது தான் தற்போது பரபரப்பான டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை தெற்கு (முருகேஷ்), கோவை மாநகர் (நா.கார்த்திக்) மற்றும் கோவை வடக்கு (தொண்டாமுத்தூர் ரவி)  பகுதிகளில் புதிய மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில மாவட்ட செயலாளர்களின் மீது புகார்கள் மற்றும் வழக்குகள் இருப்பதால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அந்த லிஸ்டில் சில அமைச்சர்களின் பெயரும் இருக்கிறது. இந்நிலையில் திமுக ஐடி விங்க் ஒரு லிஸ்ட்டை ரெடி பண்ணி கொடுக்க, உதயநிதி ஸ்டாலின் தனி லிஸ்ட்டை கொடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறார். அதாவது முக்கிய பொறுப்புகளில் இளைஞர்களுக்கு பதவிகளை கொடுக்க விரும்புகிறார். இதன் மூலம் தொண்டர்கள் மத்தியில் புது உற்சாகமும், ஆர்வமும் ஏற்படும். இருப்பினும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் தங்களுடைய மாவட்ட செயலாளர் பதவிகளை தக்க வைத்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. இதற்காக அவர்களும் ஒரு தனி கணக்கு போட்டு வைத்திருப்பார்கள். இதன் காரணமாக மாவட்ட செயலாளர்கள் பட்டியலை முதல்வரிடம் கூறும்போது மூன்று விதமான போட்டிகள் ஏற்படும்.

முதல்வர்  15 மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகிறது. இதனால் மேற்குறிப்பிட்ட மூன்று லிஸ்டில் எதை தேர்வு செய்யப் போகிறார்? இல்லையெனில் புதிதாக எதுவும் தயார் செய்யப் போகிறாரா? என்ற கேள்விதான் தற்போது திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு திறமை வாய்ந்த மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம். மேலும் இன்னும் சில நாட்களில் மாவட்ட செயலாளர்கள் குறித்த லிஸ்ட் வெளிவரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |