திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே போட்டி என சீமான் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு நாம் தமிழர் கட்சிக்குமே போட்டி என்று தெரிவித்தார்.
ஒரு மாநிலத்திற்கு உள்ளேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதவர்கள் எப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் வேட்பாளர் மிரட்டப்படுவது குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இது தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.