Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு அடுத்த ஷாக்… கைகோர்த்த ரஜினி ரசிகர்கள்… மாஸ் காட்டும் தமிழக பாஜக …!!

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முன்னதாக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட திமுக தலைவர் மு க ஸ்டாலின் அக்கட்சியின் தலைமையகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், சட்டமன்ற உறுப்பின்னர், மக்களவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள்,  நகர – பேரூர் கழக பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய மு.க ஸ்டாலின் இந்த தேர்தலில் திமுகவை அவ்வளவு எளிதாக வெற்றி பெற விடமாட்டார்கள். பலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர் என ரஜினியை மறைமுகமாக சாடியிருந்தார். இந்த நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததையடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

இது ரஜினி தொண்டர்களுக்கு இது மனவேதனையையும், ஏமாற்றத்தையும் அளித்தது நிலையில் இன்று கூட ரஜினி ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரஜினி தனது முடிவை மாற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே ரஜினி அரசியல் கட்சி தொடங்க வில்லை என்பதால் திமுகவினர் யாரும் ரஜினி அரசியல் வராதது குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என்று திமுக தலைமை உத்தரவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏனென்றால் ரஜினிக்கு எதிராக தொடர்ந்து பேசி ரஜினி ரசிகர்களின் வாக்குகள் திமுகவிற்கு கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது.

ஆனாலும் நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு குறித்து திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல் என விமர்சனங்கள் செய்து வருகின்றனர். இதனால் எப்படியாவது திமுகவை வீழ்த்திவிட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் பலரும் பாரதிய ஜனதா கட்சியை நாடி வருகின்றனர். பல நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வரும் செய்திகளும் திமுகவினரை நடுங்க வைத்துள்ளது.

Categories

Tech |