Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு எதிராக ஆதாரம் இருக்கு…! பிரிண்ட் போட்டு தரவா ? கையில் வைத்துள்ள அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  என் கையில் ஒரு 300 வாட்ஸ் அப்பில், பேஸ்புக்கில், டுவிட்டரில் 300க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஐடிவிங் ஆட்கள், கட்சித் தலைவர்கள், அவர்கள் சார்ந்த திராவிட கழகத்தினர் பேசினதை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஒரு டாகுமெண்ட் போட்டு… அதில் என்னவெல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று நீங்கள் பாருங்கள்.

பிபின் ராவத்தை கொன்றது யார் ? அப்படி சொல்லி ஒரு யுகம், இது ஒரு யோகம், அது ஒரு யுகம். 124a கேஸ் மாரிதாஸ்மீது போட்டு நீங்கள்  செடிஷன் என்று சொன்னீர்கள் என்றால் அதைவிட நூறு மடங்கு மோசமான கருத்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், தலைவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல விபின் ராவத் அவர்கள் இறந்தது மிக சரி என்று சொல்லி, தமிழகத்தில் இருக்கக்கூடிய திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். அந்த ஆதாரத்தை உங்களுக்கு கொடுக்கிறேன். அதற்கு வந்த ஐகான் போட்டு, எமோஜி போட்டு, வாழ்த்து செய்தி எல்லாம் போட்டு இருக்கிறார்கள். ஆனால் இங்கே இருக்கக்கூடிய அரசிற்கு அது எதுவுமே கண்ணுக்குத் தெரியாது.

யாராவது வந்து திக, திமுக என்று சொல்லிட்டு கண்ண மூடிகிட்டு அதை பார்க்காமல், யாராவது தேசியவாதி ஒரு கருத்தைச் சொல்லும் போது….  கருத்து சுதந்திரத்திற்கு அருகில் இருக்கின்ற கருத்தை சொல்லும் போது அதை ஒரு பெரிய பிரச்சினையாக பேசுகிறார்கள். அதனால் இவர்களுக்கு யாரும் கண்ணுக்கு தெரியாது. நீங்கள் டிவியில் போடுகிறேன் என்று சொல்லுங்கள்.  எந்த நபருக்கு வேணும்னு சொல்லுங்க.

சேம்பருக்கு வாங்க, நான் எல்லா பிரிண்ட் அவுட்டில் உங்களுக்கு தருகிறேன். ஆனால் நீங்கள் அதை டிவியில் போட வேண்டும். நீங்கள் போடுவேன் என்று சொன்னால் நான் பிரிண்ட் அவுட் கொடுக்கிறேன். திமுக ஐடி விங்கில் டெலீட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை உங்களுக்கு கொடுக்கிறேன். உங்களுடைய தொலைக்காட்சியில் பண்ணுங்க. இதே கேள்வியை டிஜிபியிடம் கேளுங்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |