சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடலில் எல்லை என்பதே கிடையாது. இதுபோன்ற கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்கள் காற்றின் வேகத்தில் தான் சொல்வார்கள். இது போன்று கைது நடவடிக்கைகளை சித்திரவதைகளையும் முற்றிலும் நிறுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு இல்லை. நேர்மையான முறையில் நடைபெற்று இருந்தால் வெற்றி தோல்வி சமமாக இருந்திருக்கும். மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தியதற்கு பதிலாக, கட்சி தொண்டர்களை வைத்து திமுக தேர்தல் நடத்தியிருக்கலாம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி அதர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேசியுள்ளார்.