தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, சகோதரர் அண்ணாமலையை இன்றைக்கு இவ்வளவு பெருசா வளர்த்து விட்டதே திமுககாரர்கள் தான், நியாபகம் வச்சுக்கோங்க. நாம் நன்றியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு தெரியும் எப்ப வேணாலும் போய்விடும் என்று, எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான். எப்போது ஓலம் வரப்போகிறது என்று… மகாராஷ்டிராவில் ஆப்பு வைத்தோம் அல்லவா, அதில் தப்பு இல்லை.
அப்ப கூட பெருந்தன்மையாக நமக்கு அதிக சீட்டு இருந்தால் கூட நம்மாளு துணை முதலமைச்சர் தான், அந்த பெருந்தன்மை என்று சொல்லுகிறீர்கள். இந்தியாவில் இரண்டு அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள் ஒன்னு மோடிஜி, இன்னொன்னு அமித்ஷாஜி ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் கரு அறுத்து விடுவார்கள் ஜாக்கிரதை. நீங்கள் பத்தாயிரம் தடவை ஒன்றிய அரசாங்கம் என்றாலும் சரி, பத்தாயிரம் தடவை திராவிட மாடல் என்று சொன்னாலும் சரி கண்டுக்கவே மாட்டோம்.
இதெல்லாம் சோறு போடாது, எவனோ ஒருவர் தட்டி விடுறான், அவனை தானே தேடிக் கொண்டிருக்கிறேன், யார் இவரை தட்டி விட்டது என்று…..ஏனென்றால் திராவிட மாடல் இல்லை என்று சொல்லி திராவிட இயக்கத்தில் இருக்கிற வக்கீல்கள் சொல்கிறார்கள், திராவிட மாடல் என்பது குற்றம் தான் என்று, கேட்க வேண்டாமா அதையெல்லாம். பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று சொன்னார்கள், ஆனால் அதுவும் குறிப்பிட்ட பேருந்தில் இலவசம் என்று சொல்லி இருக்கு.
உங்க நிதி அமைச்சர் சொல்கிறாரே போக்குவரத்து கழகத்தில் நமக்கு நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது, அதற்கு என்ன அர்த்தம் ? இலவசமாக கொடுக்காதீர்கள் என்று சொல்லுறாரு அவரு… ஆனால் இவர் சொல்கிறார் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்…ஆனால் பெண்கள் இலவச பேருந்துக்காக நின்று நின்று கால் யானைக்கால் ஆக மாறிவிடும் போலிருக்கிறது, அது ஏதோ வையிட் போர்ட் போட்ட பேருந்து தான் வருமாம் அதுதான் இலவசமா ? என தெரிவித்தார்.