Categories
மாநில செய்திகள்

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு புறக்கணிப்பா…? திருமாவளவன் அதிரடி கருத்து..!!

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விசிக புறக்கணிக்கவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்தப் பேச்சுவார்த்தையை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் புறக்கணித்தன தகவல் வெளியானதை தொடர்ந்து திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காலை 10 மணிக்கு முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

அப்போது திமுக கட்சியில் உள்ள பங்கீடு பேச்சு வார்த்தையை விடுதலை சிறுத்தை கட்சி புறக்கணிக்க வில்லை என்றும், தொடர்ந்து கூட்டணியில்  விசிக  பங்கேற்கும் என்று அவர் கூறினார். கூட்டணியில் ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டதாகவும், 4 தனி தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |