Categories
அரசியல்

“திமுகவுடன் கூட்டணி இல்லை…. தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ்”…. எதுக்கு இந்த திடீர் முடிவு?….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பணிக்குழு, திமுக தேர்தல் பணிக்குழு உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தற்போது காங்கிரஸ் திமுகவில் இருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் நிலையில் பெரம்பலூரில் மட்டும் இவ்வாறு தனித்துப் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |