தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுகவை பாராட்டி பேச முடியாததால் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். மாநில உரிமை, சமூகநீதி உள்ளிட்டவற்றுக்கு திமுகவுடன் துணை நிற்போம் என அவர் தெரிவித்துள்ளார்.