தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிரில்லாமல் தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு தன்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக
துறை அமைச்சா் எ.வ.வேலு கூறியுள்ளார். தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை கூர்மையாக கவனித்த ஒன்றிய அரசு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு சார்பில் நம்மை காக்கும் 48 ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த எட்டு மாதங்களில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்தியாவுக்கே முன் மாதிரியாக உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. என அவர் கூறியுள்ளார்.