Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவை வம்பிழுக்க வேண்டாம்”…. நாங்க அப்படி சொல்லல….. ஆர்.எஸ்.பாரதி காட்டம்…..!!!!

பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரின் கருத்துக்கு திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவுக்கு எதிர்ப்புகளும் ஆதரவு குவிந்து வருகின்றன. அவ்வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல். முருகன் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கூறிய அவர், இளையராஜா என்ன குற்றம் செய்தார்? திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பிடிக்காத ஒரு கருத்தை இளையராஜா சொன்னது ஒரு குற்றமா?இளையராஜாவுக்கு திமுக கருத்து சுதந்திரத்தை மறுக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இவரது கருத்திற்கு திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அமைச்சர் முருகன் தேவையில்லாமல் எங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம். பிரதமர் மோடி பற்றி இளையராஜா கூறிய கருத்துக்கு திமுக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும் போது எங்களை வம்புக்கு இழுப்பது ஏன் ? என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |