Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவோடு முரண்படும் மார்க்சிஸ்ட்…. நீங்களும் இப்படி பண்ணலாமா….? திமுக என்ன சொல்ல போகுது….!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நேரடி தேர்தலாக நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் உள்ளாட்சித் தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்களா? இல்லை வார்டு கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்களா? என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறிய மாற்றம் செய்தால் கூட தேர்தலை நிறுத்த நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது .இதனால் தேர்தலை நடத்த காலதாமதம் ஆகும். 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பொது வார்டு, பெண் வார்டு, ஆதிதிராவிடர் வார்டு என்று தேர்தல் நடைபெற்றது.

அதிமுக தேர்தலை தள்ளிப்போட மேயர் பதவிக்கு நேரடிப் தேர்தல், மறைமுக தேர்தல் என மாறி மாறி கூறினர். கடைசியாக மேயர் பதவிக்கு அதிமுக சொன்னது மறைமுக தேர்தல். அதன்படி இந்த முறை மேயர் தேர்தல் மறைமுகமாக நடைபெறும் என்று மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேயா் பதவி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தலைவர் பதவிக்கான தேர்தல் மக்களால் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை நேரடியாக நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வராமல் மறைமுகமாக நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது. இது ஜனநாயக மீறல். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேரடி தேர்தலாக நடத்த முன்வர வேண்டும் என்றும் , தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |