முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கிழக்கு நகரிலுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்றதற்கு பணபலம், கூட்டணி பலம், அதிகார பலம் போன்றவைதான் காரணம். ஜெயலலிதா முதல் முறையாக அ.தி.மு.க தனித்து களம் கண்டுள்ளது. அ.தி.மு.கவில் தலைமையே கிடையாது. தற்போது இருப்பவர்களை கட்சியை நடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை குறித்து பேசி முடிவெடுப்போம்.
தி.மு.க ஆட்சி மீது உள்ள வெறுப்பில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை. அ.தி.மு.க, தி.மு.க.வில் இணைந்து விடும் என அமைச்சர் பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. தி.மு.க.தான் அதிமுகவில் இணையும். தமிழகத்தில் என்றுமே தி.மு.க , அ.தி.மு.க தான் ஆட்சி செய்யும் மாற்று கட்சியினர் யாரும் வர முடியாது எனவும் கூறியுள்ளார்.