திமுக-அமமுகவினர் இடையே நடந்த மோதலில் வேட்பாளர் சட்டை கிழிக்கப்பட்டு 3 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரம் 3-வது நகராட்சிக்கான வாக்குபதிவு பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாக்குபதிவு நடந்து கொண்டிருந்தபோது தி.மு.க வேட்பாளரான விஜயன் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்கு சேகரித்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அ.ம.மு.க வேட்பாளர் பால்பாண்டி அவர்களை வெளியேற்றுமாறு கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் அமமுக வேட்பாளர் பால்பாண்டியின் சட்டை கிழிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பால்பாண்டி தனது ஆதரவாளர்களுடன் அல்லிநகரம் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார். அப்போது காவல்நிலையம் அருகே சென்றபோது அவரை வழிமறித்த திமுகவினர் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டவர்கள் விலக்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த மோதலில் அமமுகவை சார்ந்த 3 பேருக்கும், திமுகவை ஒருவருக்கு காயம் அடைந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.