மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனின் ரூபாய் 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது
தமிழக மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.