Categories
மாநில செய்திகள்

“திமுக அரசின் குறிக்கோள் இதுதான்”…. அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு….!!!!

நேற்று விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் வாயிலாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு தலைமை தாங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்ற 149 முன்னணி நிறுவனங்கள் இலங்கை அகதிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்துள்ளனர்.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், “வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது, அந்த வேலைக்கு தகுதியான இளைஞர்களை உருவாக்குவது போன்றவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள், 1,900-க்கும் மேற்பட்ட ஆண்கள், 4 இலங்கை தமிழர்கள், 2 ஆதரவற்ற விதவைகள், 3 திருநங்கைகள், 42 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்து பங்கேற்றனர். இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |