Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசின் மெத்தனப்போக்கு…. சாத்வீக முறையில் போராட்டம்…. ஓபிஎஸ் எச்சரிக்கை…!!!

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அம்மா உணவகத்தில் சப்பாத்தி நிறுத்தப்பட்டது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான்கு நாட்களுக்கு முன்னதாக சப்பாத்தி நிறுத்தியது குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன். மீண்டும் இந்தத் திட்டத்தை நிற்காமல் திமுக அரசு தொடர வேண்டும். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அத்துமீறிய செயல்பாட்டின் காரணமாக அதிமுகவின் வெற்றி மறைக்கப்பட்டு திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது குறித்து தமிழக ஆளுநரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அரசின் மெத்தனப் போக்கையே நாள்தோறும் கண்டித்து பிரச்சினைகளை அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறேன். தற்போது 6 மாத கால அவகாசம் நிறைவேறப்போகிறது. நிச்சயம் திமுகவின் மெத்தனப் போக்கை கண்டித்து சாத்வீக முறையில் போராட்டம் நடத்துவோம் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |