சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணையில் மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும், அணையின் முழு கொள்ளளவு வீணாகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் திமுக அரசின் மெத்தனம் என்று விவசாயிகள் கூறுகின்றன.
இந்நிலையில் தற்போது பரம்பிக்குளம் அணையின் பிரதானம் பகுதிகளில் ஒன்று உடைந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறி கடலில் கலப்பதன் காரணமாக இந்த ஆண்டு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயத்திற்கு தண்ணீர் வராது. மேலும் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு இனிமேல் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்பதால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வத்தை வர வாய்ப்பே இல்லை. எனவே 2 வது முறையாக டிசம்பர் மாதம் முதல் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்திற்காக திறந்து விட வேண்டிய தண்ணீர் வராது. இதனால் தென்னை விவசாயம் பாதிக்கப்படும் என்றும் நிலத்தடி நீர் குறையப்கூடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகுகளில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்யவும். இந்த ஆண்டு விவசாயத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்ள வழிவகை செய்யவும் இனிவரும் வரும் காலங்களிலாவது பருவமழைக்கு முன்பே அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.