தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 100-வது நாளை எட்டி உள்ளது. இதையடுத்து 100 நாள் சாதனை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற திமுக அமைத்திருக்கும் ஆட்சி என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆறாவது முறை அடைந்த மாபெரும் வெற்றி ஆகும். ஐந்தாண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது குறைவானது தான். ஆனால் இந்த 100 நாட்களின் கழக அரசு செய்துள்ள சாதனைகள் நிறைவானது என்பதை எண்ணி மகிழ்கிறேன்.
கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மக்களை காத்தல்
எந்த அலையையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை மாற்றுதல்
மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம்
பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்
இந்தியாவின் வேறு எந்த மாநில அரசும் வழங்காத 9 ஆயிரம் கோடி மதிப்பிலான 14 மளிகை பொருட்கள்
குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு
நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களுக்கு புத்துயிர்ப்பு
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் என முத்தான பத்து திட்டத்தை வழங்கி இருக்கிறோம். 120-க்கும் மேற்பட்ட முக்கியமான அறிவிப்புகள், முன்னெடுப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதில் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கான முதன்மையான திட்டங்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன் என்றுள்ளார்.