Categories
சினிமா தமிழ் சினிமா

“திமுக அரசுக்கு திராணிகூட இல்ல” இதுல கஞ்சா பூ கண்ணாலன்னு பாட்டு வேற…. விருமன் பாடல் சர்ச்சை….!!!!

பிரபல நடிகர் கார்த்தி நடித்துள்ள படத்தின் பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தை தொடர்ந்து விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது‌. இந்நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் இணையதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது. அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலனு பாட்டு வேற என பதிவிட்டுள்ளார். இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்எல்ஏ மயிலை வேலு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். படத்த வச்சி ஒப்பிட்டு செய்றாரு அறிவாளி.‌ அப்போ இந்த படத்துபடி உங்க தலைவர் இப்படித்தான் ஆட்சி பண்ணியிருக்காரு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |