Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசு சரியா செயல்படல…  பிரதமர் மோடி கவனிச்சுட்டு தான் இருக்காரு… பா.ஜ.க குற்றச்சாட்டு

வடிகால் கட்டமைப்பை சரிசெய்ய திமுக அரசு தவறிவிட்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை நிபுணர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 2016 – 17 ஆம் ஆண்டிலிருந்து வாங்கிய பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மழை வெள்ளப் பாதிப்பு போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

பொதுவாக ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு மாநில அரசு முழுமையாக  வடிகால் கட்டமைப்புகளை சரிசெய்து மழை வெள்ளம் வராத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் திமுக அரசு அதை செய்ய தவறிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்ட ஆகியோரும் தமிழக வெள்ள பாதிப்பு நிலவரத்தை கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். சென்னை முழுவதும் பார்வையிட்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டு தான் உள்ளார். மேலும் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், மேலும் பத்து நாட்கள் நீட்டித்து தரவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரமும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |