நீட் அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அதிமுக அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி ட்வீட் செய்துள்ளார். அதில், அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி நீட் தேர்வுக்கு தயார்ப்படுத்தி நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக் குழியில் தள்ளி இருக்கக்கூடிய திமுக அரசே நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?
அதுமட்டுமல்லாமல் தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் வைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவராக அப்போது இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் சொன்னது இப்போது என்னவாயிற்று, அதை எப்போது அந்த ரகசியத்தை செயல்படுத்துவீர்கள்? அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறுமெனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என தன்னுடைய அறிக்கையின் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும், தொடர்ந்து சட்டப்பேரவையிலும் தொடர்ந்து வலியுறுத்தியும் அதற்கு சரியான பதிலைக் கூறவில்லை.
மாணவர்களுக்கு முறையான பயிற்சி இருந்தால் நீட் தேர்வை அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் 19 வயதான தனுஷின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். எனவே இந்த நீட் அச்சத்தினால் உயிரிழந்த மாணவனுடைய தற்கொலைக்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். இனியும் இதுபோன்ற மாணவர்களுடைய உயிரில் திமுக அரசு விளையாடக்கூடாது என்று தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி தன்னுடைய டுவிட்டர் வாயிலாக பதிவு செய்துள்ளார்.