முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து பாரதிய ஜனதா மற்றும் அதிமுக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 8-ம் தேதியும் பாரதிய ஜனதா சார்பில் வரும் 9ஆம் தேதியும் நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் முல்லைபெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் எனவும் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் தேனி ராமநாதபுரம் மதுரை திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான நீர் முல்லை பெரியாறு அணையை சார்ந்துள்ளது எனவும் எனவே முல்லைப் பெரியாறு அணை நீரை பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுன் எனவும் கூறினார். மேலும் பேசிய அவர் முல்லை பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 138.5 அடி ஆகும்
ஆனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு வரும்போதே நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வெறும் 5 டிஎம்சி தண்ணீர் தான் கிடைக்கும் இது விவசாயத்திற்கு போதுமானதாக இருக்காது என அவர் கூறினார். எனவே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக நடத்தும் போராட்டங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் எனவும் அவர் கூறினார்.