Categories
தேனி மாவட்ட செய்திகள்

திமுக அரசை கண்டித்து… பாஜகவினர் ஆர்ப்பாட்டம்… கழுதைகளை கொண்டு வந்ததால் பரபரப்பு…!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கத திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில இளைஞரணி செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன், பாஜக மாவட்ட பொது செயலாளர் மாரிச்செல்வம், நகர தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது சரக்கு வாகனத்தில் 2 கழுதைகளை பாஜகவினர் கொண்டு வந்தனர். ஆனால் கழுதைகளை இறக்குவதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே சற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்குப்பின் பாஜகாவினர் கழுதைகளை அங்கிருந்து சரக்கு வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |